bird 2 - 2026

கல்லைத் தூக்கிப் போட்டு தண்ணீர் அருந்தும் பறவை!

சற்றுமுன் அடடே... அப்படியா?
bird 2 - 2026

அறிவியில் இல்லாத இடமே இல்லை. நாம் செய்கிற ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் அறிவியல் இருக்கிறது. குறிப்பாக, இயற்பியல் இருக்கிறது.

அறிவியல் விதிகள் மனிதர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று என நாம் எண்ணிக்கொள்ளக்கூடாது.

இயற்பியல் தெரிந்த குருவி ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அதாவது தாகத்துடன் இருக்கும் குருவி, தண்ணீர் தேடி அலைகிறது.

அப்போது வாட்டர் பாட்டிலில் தண்ணீர் இருப்பதை அறிந்த அந்தக் குருவி, அருகில் இருக்கும் கற்களை தூக்கிப் போட்டு, வாட்டர் பாட்டிலில் தண்ணீரை மேலே வரவைத்து அழகாக தண்ணீரை குடித்து தாகத்தை தணித்துக் கொள்கிறது. இது போன்ற காக்கை கதையை நாம் சிறுவயதில் கேட்டு இருப்போம்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இயற்பியல் தெரிந்த குருவி என கமெண்ட் அடித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.