நெல்லை: பெருமழை, வெள்ளத்தால் சீரழிந்துள்ள கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக, நெல்லை மாவட்டத்தின் தாலுகா வாரியாக, பொருள்கள் சேகரிக்கப் படுகின்றன.
கேரள மாநில வெள்ள நிவாரணமாக திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ரூ.1,81,000/- மதிப்பிலான ஜவுளிகள் (பெட்ஷிட், லுங்கி, நைட்டி, டவல், சிறுவர் சிறுமியர் ஆடைகள் மற்றும் உள்ளாடைகள்) மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஞாயிற்றுக் கிழமை இன்று ஒப்படைக்கப்பட்டது.
இதுபோல், என்னென்ன பொருள்கள் தேவை என்பது குறித்த பட்டியலை வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் அனுப்பி, தென்காசி செங்கோட்டை தாலுகா அலுவலகங்களில் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப் படுகிறது. இது குறித்து விடுக்கப் பட்ட வேண்டுகோளில்…
தற்சமயம் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நமது அண்டை மாநிலமான கேரளாவிற்கு தேவையான அத்தியவாசிய நிவாரணப் பொருள்களை பொது மக்களாகிய நாமும் அனுப்ப கடமை பட்டுள்ளோம்.
முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் 18-8-2018 முதல் தினமும் காலையில் 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் கேரள அரசிடம் ஒப்படைக்க செல்கிறது
கீழே பட்டியலிடப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை அதிக எண்ணிக்கையில் சேகரித்து அனுப்ப ஏதுவாக பொதுமக்கள் தங்களின் பங்களிப்பினை நல்குமாறும், மேலும், பயன்படுத்திய ஆடைகள், செருப்புகள், காலாவதியான பொருட்கள், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான பொருட்கள் வழங்குவதை முற்றிலுமாக தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. குடிநீர் பாட்டில்கள் (1/2/5 லிட்டர்)
2. குளியல்சோப்/துணிதுவைக்கும்சோப்/பவுடர்
3. கொசுவர்த்திசுருள்/கொசுவிரட்டி
4. மெழுவர்த்தி/தீப்பெட்டி
5. தலையணை/போர்வை
6. டீதூள்/காபிதூள்
7. பால்பவுடர்
8. பேபிடையபர்
9. சானிட்ரி நாப்கின்
10. செருப்புகள் (ஆண்/பெண்/குழந்தை)
11. சேலைகள் / நைட்டி / பவாடை
12. லுங்கி / வேஷ்டி/ சட்டைகள்
13. உள்ளாடைகள் (ஆண்/பெண்/குழ)
14. குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான இதர துணி வகைகள்
15. உப்பு சர்க்கரை கரைசல் / ELECTROLYTE
16. அரிசி
17. மாவு (கோதுமை/மைதா/ரவா/அரிசி)
18. நிலக்கடலை / பயிறு வகைகள்
19. தேங்காய்எண்ணெய்
20. ரஸ்க் / பிஸ்கட்
21. டார்ச் / பேட்டரி
*சேகரிக்கப்படும் இடம் Town Hall செங்கோட்டை
*சேகரிக்கப்படும் இடம் வட்டாட்சியர் அலுவலகம், தென்காசி
குறிப்பு:- பயன்படுத்திய ஆடைகள், செருப்புகள் வழங்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்
இதுபோல் வீ.கே.புதூர் தாசில்தார் நல்லையாவும் வீகே புதூர் தாலுகா அலுவலகத்தில் வந்து நேரில் தாராளமாக வழங்கி கேரள மக்களின் துயரில் தோள் கொடுப்போம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்