புதுச்சேரி: கேரள வெள்ளப் பாதிப்பு ஜிப்மர் உதவி எண் அறிவிக்கப் பட்டுள்ளது. கேரள வெள்ளத்தில் மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தகுந்த ஆலோசனைகளை மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் வழங்க ஜிப்மர் மருத்துவமனை ஆலோசனை மையத்தினை தொடங்கியுள்ளது.
இந்த சேவையானது 24 மணி நேரமும் வழங்கப்படுமென்றும் அதற்கான இலவச தொடர்பு எண்னையும் அறிவித்துள்ளது 78670 86311 இந்த சேவையானது நாளை காலை 9.30 மணி முதல் செயல்பட தொடங்கும் என ஜிப்பர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.




