புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் காவிரி கிளை வாய்க்காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் டாக்டர் துரைமாணிக்கம் தண்ணீர் வரும் அளவினை விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் பார்வையிட்டார்.அப்போது கல்லணை கால்வாய் சங்க நிர்வாகிகள் கணேசன்,வேட்டனுார் நடராஜன் மற்றும் இ கம்யூ மாவட்டசெயலாளர் மாதவன்,நிர்வாகிகள் ராசேந்திரன்,பெரியசாமி,தண்டபாணி,சொர்ணகுமார்,முத்துச்சாமி,கொ்க்குமடை ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.அப்போது அவர் பேட்டியளித்தபோது மேட்டுரில் தண்ணீர் திறந்து ஒருமாதம் ஆகியும் இன்னும் இப்பகுதிக்கு போதுமான தண்ணீர் வரவில்லை அரசு தலையிட்டு இந்த பகுதிக்கு தண்ணீர் வழங்கவேண்டும் எ்ன்றார்.




