images 2 - 2026

நாளை மகாசிவராத்திரி..

சற்றுமுன்
images 2 - 2026

மதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் கன்னியாகுமரி பகவதியம்மன்கோயில்‌ ராமேஸ்வரம் உட்பட‌ சகல சிவாலயங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். குறிப்பாக மாதம் தோறும் வரும் சிவராத்திரியை விட மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்தசியன்று வரும் சிவராத்திரி அனைத்து நலன்களையும் ஒரு சேர வழங்குவதால் மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

நாளை (மார்ச் 1) மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை முதல் கால பூஜையும், இரவு 9.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 12.30 மணி வரை 2-ம் கால பூஜையும், நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை 3-ம் கால பூஜையும், அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை 4-ம் கால பூஜையும் நடக்கிறது.

விரதமிருந்து மகா சிவராத்திரி அன்று 4 சாமத்திலும் சிவபெருமானை வழிபட்டு வாழ்க்கையில் அனைத்து விதமான நற்பலன்களையும் அடையலாம்.

சிவராத்திரி்‌‌யை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், அலங்காரங்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டு உள்ளார். கோவை ஈசா‌ ஆசிரமத்தில் பல்வேறு சிறப்பு ‌‌‌‌‌‌‌‌நிழ்ச்சிகள்சிவராத்திரி விழாவில்‌நடைபெறும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 8 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.