Dhinasari Home page

உக்ரைனில் மேலும் ஒரு இந்திய மாணவர் பலி…

சற்றுமுன்

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில் மேலும் ஒரு இந்திய மாணவர் இன்று உயிரிழந்துள்ளார். உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள இயலாமல் இந்திய மாணவர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த மாணவர் சந்தன் ஜின்டால்(22) வின்னிடசியா தேசிய மருத்துவக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த மாணவன் பஞ்சாபை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு வின்னிட்சியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். மேலும் இவரது இறுதி சடங்கிற்காக அவரது உடலை இந்திய கொண்டு வர உதவுமாறு மத்திய அரசுக்கு அவரது பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.