பிஎஸ்என்எல்.,க்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு!

இந்தியா உரத்த சிந்தனை துணுக்குகள் தொழில்நுட்பம் வணிகம்
BSNL OFF - 2026

வோடபோன் ஏர்டெல் செல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் குறைந்து வரும் அதே நேரத்தில், ஜியோ, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் வோடாபோன் ஐடியா ஏர்டெல் நிறுவனங்கள் 49 லட்சம் பயனாளர்களை இழந்துள்ளது. ஜியோ பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் அதிக வாடிக்கை யாளர்களைப் பெற்றுள்ளது என்று தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான டிராய் தெரிவித்துள்ளது!

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ உள்ளிட்ட மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 117.239 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நூத்தி 117.1 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை நகர்ப் பகுதிகளில் குறைந்து 65.91 கோடியாகவும் கிராமப்புற பகுதிகளில் அதிகரித்து 51.28 கோடியாகவும் உள்ளது!

ஏர்டெல் நிறுவனம் செப்டம்பரில் 23.8 லட்சம் வாடிக்கை யாளர்களை இழந்துள்ளது. இதையடுத்து இதன் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 32.55 கோடியாக குறைந்துள்ளது. இதுபோல் வோடபோன் ஐடியா 25.7 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து 37.24 கோடி வாடிக்கையாளர்களுடன் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவில் 63.83 லட்சம் புதிய வாடிக்கை யாளர்கள் இணைந்துள்ளனர். இதன் மொத்த உபயோகிப் பாளர்கள் எண்ணிக்கை 35.52 கோடியாக அதிகரித்துள்ளது. எம்டிஎன்எல் நிறுவனத்தில் 3.93 லட்சம் உபயோகிப்பாளர்கள் 8,718 பேர் கடந்த காலங்களில் வெளியேறியுள்ளனர்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 7.37 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். இதை அடுத்து அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 11.69 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.