இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட்… #ஓசிஆட்டோதிமுக ..!

பொதுக்குழுவிற்கு ஆட்டோவில் வந்த திமுக நிர்வாகிகள் காசு கொடுக்கவில்லை என்று செய்தி.

இன்று திமுக., பொதுக்குழுக் கூட்டம் சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ.,வில் நடைபெற்றது. இதற்கு ஆட்டோ அமர்த்தி வந்த திமுக.,வினர், ஆட்டோவுக்கு உரிய கட்டணத்தைக் கொடுக்காமல், இலவச பயணம் மேற்கொண்டது போல், பொதுக்குழுக் கூட்ட அரங்குக்கு நேரடியாகச் சென்றுவிட்டார்களாம். இது குறித்து நடுரோட்டில் நின்று கொண்டு, தனக்குப் பணம் கொடுக்கவில்லை; பசிக்குது சார், சாப்பிட பணம் இல்லை என்று புலம்பும் ஆட்டோக்காரர் குட்டியின் வீடியோ இன்று சமூகத் தளங்களில் டிரெண்ட் ஆனது.

இந்த வீடியோவைப் பகிர்ந்து, #ஓசிஆட்டோதிமுக என்ற ஹேஷ்டேக் போடப்பட்டு, டிவிட்டரில் பகிரப் பட்டது. இந்த ஹேஷ்டேக், இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து, ட்ரெண்ட் ஆனது.

பொதுவாக, ஞாயிற்றுக் கிழமை ஆனால், ஏதாவது பிரச்னையை முன்வைத்து, டிவிட்டர் தளத்தில் ஹேஷ்டேக் போட்டு முதலிடம் பிடிக்க வைப்பது வழக்கமாக இருக்கிறது. இதனை திமுக., சார்புள்ளவர்கள் பெரிதாக செய்து வந்தார்கள். திமுக., ஐ.டி., பிரிவினைச் சேர்ந்தவர்களின் தூண்டுதலில் ஏதாவது விவகாரம் கிளப்பப் படும்.

அதற்கு போட்டியாக, அதிமுக., ஐ.டி.விங், பாஜக., ஐடி., விங் என்று பலரும் களத்தில் குதித்து விட்டதால், எந்தக் கட்சியின் ஐ.டி. விங் சிறப்பாக வேலை செய்தது என்ற பவர் பாலிடிக்ஸ் இப்போது டிவிட்டர் யுத்தமாக நடைபெற்று வருகிறது.

இன்றைய டிவிட்டர் யுத்தம் ஆட்டோ டிரைவர் குட்டியின் புகார் புலம்பலுடன் திமுக.,வுக்கு எதிராக டிரெண்ட் ஆக்கப் பட்டுள்ளது.

திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை YMCAயில் இன்று நடைபெறும் நிலையில், ஆட்டோவில் வந்த மூன்று திமுகவினர் பணம் தராமல் சென்றுவிட்டனர். பசிக்குது சாப்பாட்டிற்கு காசு இல்லை என்று புலம்பும் ஆட்டோ டிரைவர் குட்டி

#ஓசிஆட்டோதிமுக @AIADMKOfficial @arivalayam

#ஓசிஆட்டோதிமுக

பொதுக்குழுவிற்கு ஆட்டோவில் வந்த திமுக நிர்வாகிகள் காசு கொடுக்கவில்லை என்று செய்தி.

ஆட்சியில் இல்லாத போதே இவ்வளவு ரவுடி தனம். டீக்கடை, பிரியாணிகடை,பியூட்டிபார்லர் தொட்டு இப்போ ஆட்டோ காரர். ஆட்டோ ஓட்டி பிழைக்கும் நபர்களிடம் கூடவா உங்கள் ஈனப் புத்தியைக் காட்டுவீர்?

#ஓசிஆட்டோதிமுக

இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்தது.