IMG 20220308 WA0004 - 2026

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு…

சற்றுமுன்

பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழாவிற்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் திருநடை இன்று மாலை நடைதிறந்துவைக்கும் வைபோகம் நடைபெற்றது.

மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திருநடை திறந்து வைத்தார்.மளிகைபுறம் கோயில் நடையை மேல்சாந்தி சம்பு நம்பூதிரி திறந்து வைத்தார்.இன்று வேறு பூஜைகள் ஏதும் இல்லை.இரவு நடை அடைக்கப்பட்டு
நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறப்பு நிர்மால்ய தரிசனம் நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து கோவில் சன்னிதான முற்றத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் காலை 10.30முதல் 11.30க்குள் திருவிழா கொடியினை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைப்பார்.முன்னதாக கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
நாள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி க்கப்படுவார்கள்.

ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகளும் தினமும் பகலில் உற்சவபலி பூஜை உற்சவபலி தரிசனம் இரவு ஸ்ரீபூதபலி நடைபெறும்.வரும் மார்ச் 17இல் பள்ளிவேட்டை,மார்ச் 18இல் பம்பை நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் திருவிழாவில் பங்கேற்கும் பாக்கியமா மூன்றாம் ஆண்டாக வேளிநல்லூர் மணிகண்டனுக்கே கிடைத்துள்ளது.
இந்த யானையே பத்து நாள் திருவிழாவில் ஐயப்பனை சுமந்து செல்லும். மூன்றாவது ஆண்டாக விலியனூர் மணிகண்டன் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலையில் நடைபெறும் பங்குனி உத்திம் வைபவத்திற்க்காக இன்று காலை7:30 தனது யாத்திரையை தொடங்கியது.திரளானவர்கள் யானையை வரவேற்பு கொடுத்தனர்.

IMG 20220308 WA0004 - 2026
IMG 20220308 WA0003 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.