images 19 3 - 2026

இன்றும் விலை அதிகரித்த தங்கம்…

சற்றுமுன்

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 உயர்ந்துள்ளது.

தங்கம் விலையானது இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல்  விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,105க்கும், சவரன் ரூ.40,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,020க்கும், சவரன் ரூ.40,160க்கும் விற்பனையானது.இதேபோல் சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,569க்கும், சவரன் ரூ.44,552க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 76.00-க்கு விற்பனையான நிலையில் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் இன்று 1.60 காசுகள் அதிகரித்து ரூ. 77.60க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!
images 19 3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.