ஒரு மணி நேரத்தில் திருப்பதி பெருமாள் தரிசனம்! ஐஆர்சிடிசி ஏற்பாடு!

Thirupathi - 2026

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்-லைனில் வெளியிடும் ரூ.300 டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு கிடைப்பது அரிதாக உள்ளது.

நாளொன்றுக்கு 25000 என்ற எண்ணிக்கையில் 30 நாட்களுக்கு ஒரு முறை தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது. அந்த டிக்கெட்டுகள் அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்து விடுகின்றன.

இதுதவிர திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் நாளொன்றுக்கு 30000 என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கி வருகிறது.

இதற்காக ஒரு நாள் முன்னர் சென்று திருப்பதியில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி திருமலைக்கு செல்ல வேண்டும்.

ஆனால் தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இன் வாடிக்கையாளர்களுக்காக வழங்கி வருகிறது.

அவற்றை ஐஆர்சிடிசி ஆன்லைனில் அவ்வப்போது வெளியிட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு டிக்கெட்டிற்க்கும் 990 ரூபாய் கட்டணம் செலுத்தி பக்தர்கள் அவற்றை முன்பதிவு செய்ய வேண்டும்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

அதன் பின்னர் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாளன்று திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பக்தர்களை வேன் அல்லது கார் மூலம் திருமலைக்கு ஐஆர்சிடிசி நிறுவனம் அழைத்து செல்லும்.

அங்கு பகல் 11 மணிக்கு ஐஆர்சிடிசி நிறுவனத்திலிருந்து டிக்கெட் வாங்கிய பக்தர்கள் சாமி கும்பிட கோவிலுக்குள் செல்லலாம். ஒரே மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்த பின் பக்தர்களுக்கு டிக்கெட்டுக்கு உரிய லட்டு பிரசாதம் ஒன்றை ஐஆர்சிடிசி நிறுவனம் உதவியாளர் வாங்கி கொடுப்பார்.

கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் தலா 50 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். சொந்த செலவில் மதிய உணவிற்கு பின் பக்தர்கள் திருப்பதி மலையிலிருந்து திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

பத்மாவதி தாயாரை தரிசித்த பின் பக்தர்களை மீண்டும் ஐஆர்சிடிசி திருப்பதி ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து அங்கிருந்து வழியனுப்பி வைக்கும்.

ஏழுமலையானை தரிசிக்க தேவையான டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் வெப்சைட்டில் அவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இது தவிர நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ரயில், விமானம் ஆகியவற்றின் மூலம் ஏழுமலையானை தரிசிப்பதற்கான பேக்கேஜ் ட்ரிப்களை ஐஆர்சிடிசி நிர்வகித்து வருகிறது.

பக்தர்கள் ஐஆர்சிடிசி வெப்சைட்டில் தேவையான தகவல்களை பெற்று அவற்றையும் முன்பதிவு செய்து ஏழுமலையானை வழிபட வாய்ப்புகள் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories