Dhinasari Home page

எம்.பி.மகன் விபத்தில் பலி…

சற்றுமுன்

திமுக ராஜ்யசபா எம்.பி மகன் காரில் வந்தபோது விபத்து ஏற்பட்டது.இதில் எம்.பி மகன் அவரது நண்பர் இருவரும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ராஜ்யசபா எம்.பி., என்.ஆர்.இளங்கோவனின் மகன் ராகேஷ் (22), பணி நிமித்தமாக அவரது காரில் தனது நண்பர் வேதவிகாஸ் உடன் புதுச்சேரி சென்று சென்னை திரும்பினார். விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த கீழ்புத்துபட்டு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியமில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த நண்பர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.