கச்சத்தீவில் திருவிழா..தமிழக மீனவர்கள்..

Published:

 கச்சத்தீவில் புனித அந்தோணியார்
திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து இன்று இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது.

கச்சத்தீவில் புனித அந்தோணியார்
ஆலயம் உள்ளது. இந்த அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்றுமாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை 4 படகுகளில் 76 பேர் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். வருவாய், காவல் மற்றும் புலனாய்வு துறையினர் கச்சத்தீவு செல்லும் பயணிகள், படகு ஊழியர்களின் ஆவணங்கள், உடமைகள் ஆகியவற்றை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து வேர்கொட்டு பாதிரியார் தேவசகாயம் தலைமையில் பாதிரியார்கள், மீனவர்கள், 2 பெண்கள் உள்ளிட்ட 76 பேர் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர்.

அவர்களை அரசு அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். இரண்டுநாள் நடைபெறும் திருவிழாவில் இந்தியா – இலங்கை ஆகிய இருநாடுகளில் இருந்து மீனவர்களும் பங்கேற்கின்றனர். எனவே திருவிழாவின்போது இலங்கை கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் இருநாட்டு மீனவர்கள் இடையே நல்லிணக்க பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!
images 10 - 2026

Related articles

Recent articles

spot_img