கேரளாவுக்கு கனிமங்கள் கடத்தல்.. பொதுமக்கள் புகார்..

திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை புளியரை சோதனை சாவடி வழியாக நள்ளிரவு நேரங்களில் ராட்சத லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதால் சாலைகள் சேதமாகிவிட்டதாக பொதுமக்கள் புகாரால் போலீசார் இன்று தீவிர சோதனை நடத்தினர்.

மதுரை திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

விருதுநகர் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் மணல் ஜல்லி உட்பட கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனை கண்டித்து பெரும்பாலான கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் புளியரை சோதனை சாவடி வழியாக நள்ளிரவு நேரங்களில் ராட்சத லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாவும், இதனால் சாலைகள் சேதமாகிவிட்டதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிக்கு புகார்கள் சென்றதுஇதையடுத்து அவரது உத்தரவின்பேரில் இன்று காலை புளியரை போலீசார் சோதனைச்சாவடியில் திடீர் வாகனசோதனை மேற்கொண்டனர். அப்போது ஏராளமான லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எடையில் கனிமவளங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது.

இதனால் அந்த வாகனங்களுக்கு டன்னுக்கு ரூ.1000 வீதம் ஒவ்வொரு லாரிக்கும் சுமார் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற ராட்சத லாரிகளை அங்கிருந்த எடை நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் முன்னிலையில் எடை போடப்பட்டது.

பெரும்பாலான லாரிகளில் 13 டன் முதல் 20 டன் வரை கூடுதல் கனிம வளங்கள் இருப்பது தெரியவந்தது. அவைகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒருசில லாரி டிரைவர்கள் தங்களது லாரிகளை அப்படியே சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.இந்த வழித்தடத்தில் தமிழக எல்லையில் தினமும் தீவிர சோதனை நடத்த பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories