தமிழக வேளாண் பட்ஜெட்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி..

Published:

தமிழக வேளாண்மை பட்ஜெட் தாக்கல் எதிரொலி தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று குற்றம்சாட்டியுள்ளார்.

images 47 1 - 2026

வேளாண் பட்ஜெட் தொடர்பாக, சட்டசபை வளாகத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது,
அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள், பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதுடன், அவர்களின் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்படுவதால், மழையில் நனைந்து முளைத்து விடுகிறது.
இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

பாதிக்கப்பட்ட அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுவது கிடையாது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லையும் முறையாக பாதுகாப்பது இல்லை. இதனால், இழப்பு ஏற்படுகிறது. இது சரியான நிர்வாகம், திறமையில்லாத அரசு என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. இவ்வாறு பழனிசாமி கூறினார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img