மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்…

கர்நாடகா காவிரியில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

images 100 - 2026

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். பின்னர் பேசிய அவர் காவிரி பிரச்சனையில் யார் சரியாக செயல்பட்டார் என்று மோதிக் கொள்வதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து அணை கட்டுவோம் என்று கூறுவது அடாவடித்தனம். தண்ணீருக்காக தமிழ்நாடு கேரளத்திடமும், கர்நாடகத்திடமும் கையேந்தும் நிலை உள்ளது. கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்க அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

கர்நாடகத்தில் அனைத்து கட்சியினரும் காவிரி பிரச்சனையில் ஒரே அணியாக இருக்கின்றனர். தமிழநாட்டில் திமுக கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுகவும், அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தை திமுகவும் ஆதரித்தது என்று துரைமுருகன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,காவிரி பிரச்சனைக்காக நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம.தோற்றுவிட்டால் அடுத்த தலைமுறை நம்மை சபிக்கும். அண்டை மாநிலத்துடன் நல்லுறவை பேணும் நேரத்தில் நமது உரிமையையும் விட்டுக்கொடுக்கக்கூடாது இவ்வாறு கூறினார். மேகதாது விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்தில் அனைத்து கட்சியினரும் பேசி வருகின்றனர். சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு தெரிவிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக தனிப்பட்ட முறையில் மத்திய அரசிடம் இது குறித்து நிச்சயமாக வலியுறுத்துவோம் எனவும் கூறினார். மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு பாமக ஆதரவு தெரிவிப்பதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். அதேபோல காவிரியில் தமிழ்நாட்டின்உரிமையை கர்நாடகா மெல்ல பறித்து வருகிறது என வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக காவிரி நீர் உள்ளது. மேகதாது அணை விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் மூலம் காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது இவ்வாறு கூறினார்.
இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories