guruvayur - 2026

பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! குருவாயூர் தேவஸ்தானம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? ஆலயங்கள் இந்தியா
guruvayur - 2026

குருவாயூர் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார்

கேரளாவில் குருவாயூர் தேவஸ்தானத்தில் புதிய தலைவராக வி. கெ.விஜயன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து புதிய நிர்வாக குழு கூட்டம் தலைவர் விகே விஜயன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தேவஸ்தான தலைவர் விஜயன் பேசும்போது, கொரோனா காரணமாக குருவாயூர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு இருக்கின்ற நிலையில் குருவாயூர் கோவில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய அவசியமில்லை.

முன்பதிவு செய்யாமலேயே தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.