images 98 1 - 2026

இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு..

சற்றுமுன்

பெட்ரோல் டீசல் விலை இன்று இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது.இதை காரணம் காட்டி அத்தியாவசியபொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது .

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்நிலையில், 137 நாட்களுக்கு பிறகு நேற்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள்,  இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக 2வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

அதன்படி  சென்னையில் இன்று காலை பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து 102 ரூபாய் 91 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு, 92 ரூபாய் 95 காசுகளுக்கு விற்பனையாகிறது.

images 98 1 - 2026
ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.