60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி.. கூடுதல்கள் மூடப்படும்: மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர்!

Nithin katkari - 2026

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும்.
கூடுதலாக சுங்கச்சாவடிகள் இருந்தால் அடுத்த 3 மாதங்களில் மூடப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று நெடுஞ்சாலை துறைக்கான திட்டங்கள் குறித்த கேள்விகளுக்குபதில் அளித்து கட்கரி பேசியதாவது:

நாடு முழுவதும் நடந்து வரும் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள் வரும் 2024-க்குள் நிறைவடையும். அப்போது அமெரிக்க சாலைகளுக்கு இணையாக இந்திய சாலைகளின் கட்டமைப்பு மேம்படும்.

ஜம்மு-காஷ்மீரில் ரூ.7,000 கோடி திட்டப் பணிகளால் ஸ்ரீநகர்- மும்பை இடையிலான பயண நேரம் 20 மணி நேரமாக குறைக்கப்படும்.

தில்லி-ஜெய்ப்பூர், டக்ஷதில்லி-ஹரித்வார், தில்லி-டேராடூன் நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தில் 2 மணி நேரமும் தில்லி- அமிர்தசரஸ் பயண நேரத்தில் 4 மணி நேரமும் தில்லி-பெங்களூரு பயண நேரத்தில் 2 மணி நேரமும் குறையும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும். கூடுதலாக சுங்கச்சாவடிகள் இருந்தால் அடுத்த 3 மாதங்களில் மூடப்படும்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

சுங்கச்சாவடிகளுக்கு அருகே வசிப்பவர்கள் ஆதார் அட்டையை காண்பித்தால் அவர்கள் சுங்கச்சாவடியை கடக்க “பாஸ்” வழங்கப்படும்.

இந்தியாவில் ஓராண்டில் ஏற்படும் சாலை விபத்துகளில் சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். விபத்துகளை தடுத்து, உயிர்களை காக்க அனைத்து கார்களிலும் 6 “ஏர் பேக்” இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியுடன் இணைந்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் விபத்துகளை குறைப்பதில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தமிழக மாதிரி திட்டம், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு மூலம் ஏராளமான சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories