tnpsc - 2026

தேர்வர்களே அதை நம்ப வேண்டாம்: TNPSC முக்கிய அறிவிப்பு!

சற்றுமுன் அடடே... அப்படியா? தமிழகம் லைஃப் ஸ்டைல் வேலைவாய்ப்பு
tnpsc - 2026

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், அதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் எனவும் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் தெரிவிக்கிறது.

தேர்வாணையத்தின் அனைத்து அறிவிக்கைகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தொகுதி – IV க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுமாறு இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.