December 5, 2025, 11:24 PM
26.6 C
Chennai

சீனாவின் வஞ்சகப் பிடியில்… சிக்கித் திணறும் ஸ்ரீலங்கா!

china srilanka conspiracy - 2025

2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனாத் தாக்கம், உலகம் முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒரு புறம்  கொரோனாவால் மக்கள் பாதிக்கப் பட்டு இருந்தனர், மறுபுறம் பொருளாதார ரீதியில், உலகமே பெரும் பாதிப்புக்கு உள்ளானது. “பொருளாதாரம் என்னும் சக்கரம்” பல்வேறு நாடுகளிலும், ஸ்தம்பித்து நின்றது என்பதே, வரலாற்று உண்மை.

அந்த வகையில் நமது நாடு, சிறந்த நிர்வாகத் திறமையினால், பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு, பழைய நிலைக்கு திரும்பி இருப்பது, உலகத் தலைவர்களால் மிகவும் ஆச்சரியமாக பார்க்கப் படுகின்றது.

நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை என நம்மை சுற்றி இருக்கும் நாடுகள்,  பொருளாதார பாதிப்பில் இருந்து, இன்னும் மீளாமல் இருக்கின்றன.

கூடா நட்பு :

“கூடா நட்பு கேடாய் முடியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, சீனாவுடன் நட்புக் கொண்ட இலங்கை, தற்சமயம் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருவது, இலங்கை அரசையும், இலங்கை மக்களையும் மிகுந்த கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. நாளுக்கு நாள் இலங்கையில், பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே போவதால், அந்நிய செலவாணி கையிருப்பு வெகுவாக குறைந்து, மக்கள் தினமும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

நயவஞ்சக சீனா :

ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்காக, சீனாவிடம் மிகப் பெரியத் தொகையை கடன் வாங்கியது, இலங்கை அரசு. பொருளாதார மண்டலமாக மாற்ற நினைத்து, சீனாவை அழைத்தது இலங்கை அரசு. அதில் தான், தனது நயவஞ்சக எண்ணத்தை, இலங்கை மீது சீனா காட்டியது.

உலகம் முழுவதுமே, பல நாடுகளிலும், அமெரிக்காவின் டாலர் மூலமாகத் தான், பொது பண வர்த்தகம், பண பரிவர்த்தனை  நடைபெறும். அதனால் தான் அமெரிக்காவின் டாலர் மதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து போவதுடன், மற்ற நாடுகளின் பண மதிப்புடன், டாலருக்கு நிகரான மதிப்பீடு, ஒப்பிட்டு பார்க்கப் படுகின்றது.

சீனா – இலங்கைக்கும் இடையேயான வர்த்தகம், சீன கரன்சியான “யுவான்” மூலமாக நடைபெற வேண்டும் என்றும், அதற்கு மாறாக, சீனாவுக்கு இலங்கை அரசு திருப்பித் தர வேண்டிய கடன் பாக்கித் தொகையை, அமெரிக்க டாலரில் மட்டுமே வழங்கப் பட வேண்டும் என்றும், ஒப்பந்தம் போடப் பட்டது.

இதனால், இலங்கை அரசிடம் இருந்த டாலரின் கையிருப்பு, வெகுவாக குறைந்தது. அந்நிய செலவாணியும் அதிகரித்துக் கொண்டே போனதால், இலங்கையின் கச்சா எண்ணெய் இறக்குமதி, வெகுவாக குறைந்தது.

சீனாவிடம் வாங்கிய கடன், அதற்கு திருப்பி செலுத்தப்பட்ட அமெரிக்க டாலரிலான வட்டித் தொகை போன்ற காரணங்களால், இலங்கையின் பண வீக்கம் 17.5% அதிகரித்தது.

விண்ணைத் தொட்ட விலைவாசி ஏற்றம் :

கையிருப்பு குறைந்ததால், அமெரிக்க டாலர்  கொடுத்து, இலங்கையால் கச்சா எண்ணையை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால், இலங்கையில் பெட்ரோல் விலை ஓரு லிட்டர் 283 ரூபாய் ஆகவும், டீசல் விலை  ஓரு லிட்டர் 176 ரூபாய் ஆகவும் உயர்ந்தது.

உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும், வெகுவாக அதிகரித்தது. ஒரு கிலோ அரிசி 250 ரூபாய் ஆகவும் , ஓரு பிஸ்கட் பாக்கெட் 230 ரூபாய் ஆகவும், ஓரு ரொட்டி பாக்கெட் விலை ரூபாய் 100 ஆகவும், ஓரு லிட்டர் பாலின் விலை ரூபாய் 263 ஆகவும், துவரம் பருப்பு ஓரு கிலோ ரூபாய் 380 ஆகவும், ஓரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் என எல்லாப் பொருட்களின் விலையும், விண்ணைத் தொட்டது.

இவ்வளவு பாதிப்பு ஏற்பட மேலும் சில காரணங்கள் :

பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறை இலங்கையின் மொத்த  வருவாயில், சுமார் 10 சதவீதம் சுற்றுலாத் துறை மூலமாகவே வருகின்றது. அதன் மூலமாகவே, 7.5 பில்லியன் டாலர் அளவு அந்நியச் செலவாணி, 2019 ஆம் ஆண்டில் வந்தது. அது, தற்போது வெகுவாகக் குறைந்து, வெறும் 2.8 பில்லியன் டாலர் அளவே, ஜூலை மாதம் 2021 அன்று வந்தது.

அதிக அளவு பொருட்களை இறக்குமதி செய்வதால் – பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதால், மற்ற நாட்டிற்கு பெரும் அளவில் பணத்தை செலவு செய்ய வேண்டி உள்ளது. அதனால் இலங்கையின் கை இருப்பு, அதிகளவில் குறைந்து வருகின்றது.

பாதிப்புக்கு உள்ளான விவசாய உற்பத்தி – இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில்,  வெளிநாட்டில் இருந்து வரும் ரசாயனம் கலந்த உரங்களின் இறக்குமதியை, இலங்கை அரசு, குறைத்துக் கொண்டது. இதனால், விவசாய உற்பத்தி பாதிக்கப் பட்டு, விளைச்சல் பெருமளவில் குறைந்தது.

அதிகமாகி வரும் பணவீக்கம் – தேயிலை, துணி வகைகள் என இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட இருந்த, பல பொருட்கள் கொரோனா தாக்கத்தால், ஏற்றுமதி செய்யப் படாததால், பணவீக்கம் அதிகளவில் அதிகரித்தது.

உதவிக்கரம் நீட்டிய இந்தியா :

பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, நமது இந்திய அரசு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உதவித் தொகை வழங்கி உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் 7,500 கோடி ரூபாய் என மதிப்பிடப் பட்டு உள்ளது. இந்த தொகையானது, இலங்கை மக்களின் துயரைத் துடைக்கவும், அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் உபயோகப் படுத்தப் படும்.

இலங்கை அரசிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை, இந்தியாவில் இருந்து, இந்த உதவித் தொகை மூலமாக, இலங்கை அரசு வாங்கிக் கொள்ளும்.

மேலும், 40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிவாயுவை, இந்திய அரசு இலங்கைக்கு, வாரி வழங்கி உள்ளது.

அகதி முகாமில் வாழும் தமிழர்களுக்கும் உதவிக்கரம் :

தமிழக அகதிகள் முகாமில் வாழும், இலங்கை தமிழர்களின் நலனுக்காக, 2021 – 2022 நிதியாண்டில், ரூபாய் 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில், 74.82 கோடி ரூபாய், ஏற்கனவே தமிழக அரசுக்கு வழங்கப் பட்டு உள்ளது என மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா அவர்கள் தெரிவித்தார்.

இந்தத் தொகையானது, மானிய விலையில் அரிசி, துணிகள், சமையல் பாத்திரங்கள், நிதியுதவிகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் எனவும், அமைச்சர் தெரிவித்தார்.

இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், இந்தியா செய்த பேருதவியை, இலங்கை பத்திரிகைகள் வெகுவாகப் பாராட்டுகின்றன. இது போன்ற, இன்னல் தீர்க்கும் உதவிக்காக, இலங்கை அரசு, இந்தியா மீது, எப்போதும் நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என, “உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, புகழாரம் சூட்டியது.

உதவி செய்வது போல் செய்து, நாட்டை ஆக்கிரமிக்க நினைக்கும் சீனா ஒரு புறம், மனிதாபிமான உதவிகள் செய்து, இலங்கை மக்களின் துயரங்களை களைய நினைக்கும் இந்தியா மறுபுறம் என இரண்டு நாட்டிற்கும் நடுவே இருக்கும் வித்தியாசங்களை, இலங்கை அரசு தற்போது உணர்ந்து உள்ளது.

அந்நிய சக்திகளுக்கு இடம் அளிக்காமல், இந்தியாவுக்கு எப்போதும் ஆதரவு அளித்து, இந்திய நலனுக்கு உகந்த வகையில் செயல்பட வேண்டும் என்பதே, நமது எதிர் பார்ப்பாக இருந்து வருகின்றது. வருங்காலத்தில், இலங்கை அரசு அதை செய்ய வேண்டும் என்பதே, நமது எண்ணமாகவும் உள்ளது.

நமது அண்டை நாடுகள், கொரோனாத் தாக்கத்தால், பொருளாதாரத்தில் இருந்து, இன்னும் மீளாமல் இருக்கும் சூழ்நிலையில் தான், நமது இந்திய நாடு கொரோனாத் தாக்கத்தையும் மீறி, பல்வேறு வழிகளிலும் நிலை உயர்ந்து உள்ளது என்பதனை நினைத்து, நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.


  • அ. ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories