அரிமாக்களுக்குள் நடந்த அரிதான சண்டை! வைரல்!

Published:

lion 2 - 2026

சிங்கம் வேறு எந்த மிருகத்தையும் தாக்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் சிங்கங்கள் தங்களுக்குள் சண்டையிடுவது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. அதிலும் ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை தாக்குவதையும் நீங்கள் அரிதாகவே பார்த்திருக்கக் கூடும்.

தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வனவிலங்குகள் தொடர்பான காணொளியில் சிங்கம் இரண்டு சிங்கங்களுடன் சண்டையிடும் வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.

வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் போது, பெண் சிங்கத்தை ஆண் சிங்கம் தாக்குடதைக் காணலாம். பெண் சிங்கம் வேட்டையாடி தனக்கு இரை ஏதும் கொண்டு வராத கோபமோ என்னவோ, இரண்டு பெண் சிங்கங்களையும் ஆண் சிங்கம் வெறி கொண்டு தாக்குகிறது. 13 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் இந்த வீடியோ Wild_animal_shorts என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. சிங்கத்துக்கும் சிங்கத்துக்கும் இடையிலான இந்த சண்டையை காரில் அமர்ந்திருந்த நபர் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததை வீடியோவில் காணலாம்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img