ஒரு வாட்ஸ் அப் குழு உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட் இப்போது சமூகத் தளங்களில் ரவுண்டு கட்டி ரவுசு கட்டி வருகிறது! அப்படி அதில் என்ன இருக்கிறது?

டிஎம்கே ஃபார்எவர் – எப்போதும் திமுக.,தான் என்று குறிப்பிடும் வாட்ஸ்அப் குழுவின் பெயர்! அதில் ஓர் உரையாடல்…
***
காங்கிரஸுக்கு 10 சீட்டு ஓவரு சகோ
பரவால்ல சகோ

காவி கும்பலை கதறவிடணும்
எந்த பக்கம் போனாலும் அவனுங்கதான் அதனால கும்பலா போய் கதற அடிக்கணும்

FBல தனியாவே ஓட்ட விடுவானுங்க
இப்போ பாமக அதிமுக வேற

சபரி அண்ணன் கிட்ட இருந்து காசு எதாச்சும் வந்துதா சகோ
பைக் emi கட்டல சகோ. செல் ரீசார்ஜ் பண்ணல

வந்திரும் சகோ. நீங்க பதிவு போட்டு கணக்கு கரெக்டா வெச்சுக்கோங்க ரெண்டு நாள்ல வந்திருமாம்

சரிங்க நன்றி
சகோ

***
– அதாவது, சமூக வலைத்தளங்களில் கட்சி ரீதியாக கருத்து சொல்வது, கட்டுரைகளைப் பதிவு செய்வது, திமுக., வெற்றி பெறும் என்றும், திமுக., குறித்த சாதகமான அம்சங்களையும் பதிவு செய்வது, பாஜக.,வை திட்டித் தீர்ப்பது, மோடியை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவது, திமுக., மேடைகளில் கருணாநிதியும் அண்ணாத்துரையும் வளர்த்த மேடை நாகரீக அவலச் சொற்களை சமூக வலைத்தளங்களில் கொட்டித் தீர்ப்பது இவற்றுக்கெல்லாம் திமுக., ஐடி., விங் தரப்பில் இருந்து காசு கொடுக்கப் பட்டு வருகிறது என்பதைச் சொல்ல வருகிறது இந்தத் தகவல்.

உண்மையில் இது இப்படித்தானா? அல்லது இப்படியானது உண்மையாக இருக்குமா என்ற கேள்விகளை எழுப்பினாலும், கடந்த 2014 தேர்தலின் போது, திமுக., ஒரு கட்டுரைக்கு ரூ.200 கொடுக்கும் என்றும், அதற்கு எழுதுவதற்கு ஆள் வேண்டும் என்றும், இமெயில் அனுப்பப் படும் தகவலை, பேஸ்புக் உள்ளிட்டவை மூலம் சோஷியல் மீடியாக்களில் பரப்ப வேண்டும் என்றும் ஒரு ஏஜென்ஸி நிறுவனம் கூறுவதையும், அதை ரகசிய பதிவு மூலம் ஒரு செய்தி  ஊடக நிறுவனம் சேகரித்த தகவலையும் பெரிய அளவில் பகிர்ந்து கொண்டார்கள்.

யாரோ சிலர் அறைகளில் அமர்ந்து கொண்டு, இதுதான் பப்ளிக் ஒபீனியன், மக்கள் கருத்து என்று திணிப்பதற்கு, திமுக.,வினால் காசு கொடுக்கப்படுகிறது என்பது பரவலாகக் கூறப்படும் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக இந்தப் பதிவு இப்போது பொது வெளியில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்தக் குறிப்பு மட்டும் உண்மையாக இருக்குமானால்… நமக்கு சொல்லத் தோன்றுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! யாரோ சிலர் பணம் வாங்கிக் கொண்டு திமுக.,வுக்கு ஆதரவாகவும் மோடி, பாஜக., மத்திய அரசு இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போடும்போது, பகிரும் போது… அதே பணியை தம்பிடி காசு கூட இல்லாமல் வேறு எவரும் செய்யாதீர்கள்! நீங்கள் செய்வதை திமுக., ஐ.டி., பிரிவுக்கு தெரியப்படுத்தி, பணம் சம்பாதிக்கும் வழியைப் பாருங்கள்! உங்கள் காலத்தையும் நேரத்தையும் அடுத்தவர் பதிவு செய்த கமெண்டை, கருத்தை மீண்டும் எழுதி, அல்லது பார்வர்ட் செய்து வீணாக்கி, உங்கள் சம்பாதிக்கும் நேரத்தை தொலைத்து விடாதீர்கள்! திமுக.,வுக்காக ஓஸிக்கு உழைத்து உங்கள் பொன்னான நேரத்தையும் பணத்தையும் வீணாக்காமல், காசு வாங்கிக் கொள்ளுங்கள் என்பதுதான்!

பின்குறிப்பு: இந்தச் செய்தியை நாம் பகிர யாரும் ரூ.200 கொடுக்கவில்லை என்பதை உறுதி செய்கிறோம்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...