அன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் தாயார் போட்டி!

Published:

guru mother ramadoss - 2026

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் தாயார் போட்டி இடுகிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக., சார்பில் அன்புமணி ராமதாஸ் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், அங்கே அன்புமணியை எதிர்த்து வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவரான அமரர் காடுவெட்டி குருவின் தாயார் போட்டியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

Vanniyar Sangam Kaduvetti Guru - 2026

வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த காடுவெட்டி குரு அண்மையில் காலமானார். அவரது மறைவின் போது பாமக., சார்பில் எதுவும் செய்யவில்லை என்றும், தன் மகன் சீரழிந்ததற்குக் காரணம் பாமக., ராமதாஸ்தான் என்றும் காடுவெட்டி குருவின் தாயார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் காடுவெட்டி குருவின் குடும்பத்துக்கும், பாமக., தலைமைக்கும் இடையே உரசல்கள் இருந்துவந்தன.

இந்நிலையில், அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குருவின் தாயார் போட்டி இடுவார் என்று, ஜெ.குரு வன்னியர் சங்கம் அறிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img