மார்ச் மாதத்தில் பெட்ரோல்-டீசல் விலை இன்று மூன்றாவது முறையாக உயர்வடைந்நுள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.103.67க்கு விற்பனையானது.
டீசல் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ.93.71 காசுக்கு விற்பனையானது.
கடந்த 4 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.2.27 உயர்வு. டீசல் விலை ரூ.2.28 அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவ., 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 என ஒரே விலையில் நீடித்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 4 நாட்களுக்கு முன் உயரத் துவங்கியது.
சென்னையில், நேற்று பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், இன்று விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையில் உள்ளனர்
