images 42 1 - 2026

பள்ளி மாணவனை கடத்தி திருமணம் செய்த ஆசிரியை கைது.

சற்றுமுன்

திருச்சி துறையூரில் தனியார் பள்ளி ஆசிரியை பள்ளி மாணவனை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி துறையூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியையும், அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் துறையூரை சேர்ந்த மாணவனும் கடந்த 5 ஆம் தேதி, திடீரென மாயமாகினர். இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் துறையூர் போலீசில் மகனை காணவில்லை எனவும், ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஆசிரியை சர்மிளா, திருச்சி எடமலைப்பட்டி புதூரில், தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியை சர்மிளாவை போலீசார் கைது செய்து, அவருடன் இருந்த மாணவனை மீட்டனர். 
விசாரணையில், ஆசிரியை திருவாரூரில் மாணவனுடன் சுற்றித்திரிந்ததும், பின்னர், தஞ்சை பெரிய கோயிலில் ரகசிய திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியை சர்மிளாவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார், திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!
images 42 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.