வேலூர் அருகே எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை மகள் பலி..

Published:

வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் எலக்ட்ரிக் பேட்டரி பைக் வெடித்த விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IMG 20220326 WA0034 - 2026
bike - 2026

வேலூர் அருகே சின்ன அல்லாபுரம் பகுதியில் இன்று அதிகாலை எலக்ட்ரிக் பேட்டரி பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது பேட்டரி வெடித்து சிதறிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்தனர்.

புகை மூட்டத்தில் இருந்து தப்பிக்க கழிவறையில் தஞ்சமடைந்த துரைவர்மா (49), அவரது மகள் மோகன பிரீத்தி (13) மூச்சு திணறி பலியாகினர்.

கழிவறையிலிருந்து தந்தை, மகள் உடல்களை இன்று போலீசார் மீட்டனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை, மகள் உயிரிழந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் புதிய எலெக்ட் ரானிக் ஸ்கூட்டர் வாங்கினார்கள். அதில் சிக்கி தந்தையும் மகளும் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Related articles

Recent articles

spot_img