செங்கோட்டை-மதுரை, ஈரோடு – கோவை ரயில் இன்று முதல் இயங்கிய நிலையில் சிறப்பு விரைவு ரயிலாக இயக்கப்பட்டதால் பயண கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில் அதிவிரைவு ரயிலாக ஏப் 15முதல் மாற்றப்படுகிறது.
ஈரோடு – கோவை இடையேயான பயணிகள் ரயில் இயக்கம் இன்று துவங்கியது. இன்று காலை, 7:15க்கு ஈரோட்டில் புறப்படும் ரயில், திருப்பூருக்கு, 8:10 மணிக்கு வரும்; 9:45 மணிக்கு கோவையை அடைந்தது.
கொரோனா முன் வரை இந்த ரயில் ‘பாசஞ்சர்’ (டெமு) என பெயரிட்டு இயக்கப்பட்டது.தற்போது, ரயில் எண் மாற்றப்படவில்லை. ஆனால், ‘எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல்’ என பெயரிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கட்டணம், 15 முதல், 20 ரூபாயாக இருந்தது; தற்போது 10 ரூபாய் உயர்த்தி, 30 ரூபாயாக உள்ளது. திருப்பூரில் இருந்து கோவை மற்றும் ஈரோட்டுக்கு, 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்ல பயணி ஒருவருக்கு, 30 ரூபாய் கட்டணம்.வஞ்சிபாளையம் சென்றாலும், 30 ரூபாய். கோவை ஸ்டேஷனில் இருந்து வடகோவை சென்றாலும் 30 ரூபாய் தான் கட்டணம் இருந்தது. இதுபோல் செங்கோட்டை-மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில் சிறப்பு விரைவுரயிலாக இன்றுமுதல் இயக்கப்பட்டதால் பயணகட்டணம் அதிகமிருந்தது.
சொகுசு வசதிகளுடன் கூடிய கோவை – பெங்களூரு ‘டபுள்டெக்கர்’ ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2019ல் இந்த ரயில் இயக்கம் துவங்கிய போது இருந்த கட்டணமே மீண்டும் வசூலிக்கப்படுகிறது.
சிலம்பு விரைவு வண்டி ஏப்ரல் 15 முதல் அதிவிரைவு வண்டியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
சிலம்பு விரைவு வண்டி ஏப்ரல் 15 முதல் அதிவிரைவு வண்டியாக மாற்றப்படுவதால் வண்டி எண் மாற்றம் செய்ப்பட்டுள்ளது.சிலம்பு அதிவிரைவு வண்டி புதிய வண்டி எண்:
“சென்னை எழும்பூர்-செங்கோட்டை: வண்டி எண்: 20681”
“செங்கோட்டை – சென்னை எழும்பூர்:
வண்டி எண்: 20682 மாற்றப்படும் நாள்:
சென்னை எழும்பூரிலிருந்து: 15-ஏப்ரல்-22.
செங்கோட்டையிலிருந்து:
16-ஏப்ரல்-22.அதி விரைவு ரயிலாக இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.






