இன்று யுகாதி பண்டிகை விழா..

Published:

ஆந்திரா, தெலுங்கானாவில் இன்று சனிக்கிழமை யுகாதி பண்டிகை விழா கோலாகலமாக துவங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், கோவிந்தராஜசாமி கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில் ஆகியவற்றில் யுகாதி பண்டிகை விழாவையொட்டி அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் வழிபாடு துவங்கி நடைபெற்றது.

யுகாதிவிழாவை யொட்டி திருமலை கோயில் வளாகம் முழுவதும் வண்ணமயமான மலர்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
அதையொட்டி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் துவங்கி நடக்கிறது. இன்று சாமிகள் வீதிகளில் உலா வந்து
பக்தா்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

IMG 20220402 WA0030 - 2026
IMG 20220402 WA0031 - 2026
IMG 20220402 WA0024 - 2026
IMG 20220402 WA0014 - 2026

Related articles

Recent articles

spot_img