FPpSR gaUAMX9sP - 2026

விஜய்யின் தளபதி 66-படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவக்கம்…

சற்றுமுன்

தமிழ் பிரபல நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப் 13ல் வெளியாக உள்ள நிலையில் விஜய்யின் 66-வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழில் நாகர்ஜூனா கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு திரையுலக இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய்  நடிக்கவுள்ளார். தளபதி 66 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் 66-வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் விஜய், ராஷ்மிகா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். இதில் விஜய்க்கு ராஷ்மிகா சுற்றிப்போடும் போன்ற புகைப்படங்கள் மற்றும் பூஜை புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் மின்னல் வேகத்தில் பரவியுள்ளது

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் இணைந்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FPpSR gaUAMX9sP - 2026
FPpSR eaAAA8VpX - 2026
202204061322160543 2 rashu1. L styvpf - 2026
FPpSR faQAARlNr - 2026
FPpSR haQAUWpf1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.