இரு கல்லூரி பெண்களுக்குள் காதல்.-ஒருவர் ஆணாக மாற முயற்சி -போலீஸிடம் சிக்கிய பெண்கள்..

காதலித்த இரு இளம்பெண்களில் ஒருவர் ஆணாக மாற ஆப்ரேஷன் செய்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக சென்னை சென்ற அவர்களை போலீசார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர் முறையே பெரம்பலூர் தனியார் கல்லூரிகளில் பி.ஏ ஆங்கிலம், மற்றும், பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகின்றனர். இவர்கள் ஏப்5 ம்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற இரு மாணவிகளும் மாலை நீணட நேரமாகியும் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடி பார்த்தனர். கிடைக்காததால், பெரம்பலூர் போலீசில் இரு மாணவிகளின் பெற்றோர்களும் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

அவர்களின் செல்போனை ஆய்வு செய்த போது, லாடபுரத்தில் உள்ள மாணவன் ஒருவரிடம் கொடுத்து விட்டு அவனது செல்போனை வாங்கி சென்றிருப்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் காணாமல் போன இரு மாணவிகளும் குரும்பலூர் அரசு பள்ளியில் 6ம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்து வந்த நெருங்கிய தோழிகள் எனவும் தற்போது பெரம்பலூர் கல்லூரிகளில் இருவரும் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 5ம் தேதி காலை கல்லூரிப் பேருந்தில் ஏறி கல்லூரி செல்வதாக சென்ற மாணவிகள், கல்லூரிக்கு செல்லாமல் வேறு எங்கோ சென்று விட்டனர் என்பது தெரியவந்தது.

விசாரணையில் அதில் ஒரு பெண்ணுக்கு, பெண்களுக்குரிய குணாதிசயங்கள் இல்லாமல் ஆண்கள் போல் இருப்பதும் கையில் காப்பு போடுவதும் பூ, பொட்டு வைக்காமலும், ஆண்கள் அணிகின்ற செருப்பு அணிவதும், தலைமுடியை ஆண்கள் போல் அலங்கரிப்பதுமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
செல்போனை ஆராய்ந்ததில் அதிலிருந்த புகைப்படங்கள் மற்றும் செல்போன் எண்களை தொடர்பு கொண்ட போது காணாமல் போன மாணவிகள் இருவரும் சென்னை போரூர் ஓம்சக்தி நகரில் ஒரு வீட்டில் தங்கி இருப்பதும் காணாமல் போன மாணவிகள் ஆண்களாக மாறுவதற்காக சென்னை வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

மேலும் நேற்று மாலை ஒரு மாணவி ஆணாக மாறும் ஆப்ரேஷன் செய்ய இருந்த நிலையில் போலீசார் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். சென்னையிலிருந்து 2 மாணவிகளையும் மீட்டு இன்று பெரம்பலூரில் அவர்களது பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும் போலீசார் மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பால் காதல் ஏற்பட்டுள்ளது எனவும், இதனால் ஒருவர் ஆணாக மாறி மற்றொருவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தும் தெரியவந்தது. இதனால் இச்சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories