images 9 - 2026

10.5 சதவீத இட ஒதுக்கீடு தோல்விக்கு தி.மு.க. அரசு தான் காரணம் -எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி..

சற்றுமுன்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தோல்விக்கு தி.மு.க. அரசு தான் காரணம் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,7.5% இடஒதுக்கீட்டை போல 10.5% இடஒதுக்கீடு விவகாரத்திலும் நிச்சயம் சமூகநீதி நிலைநாட்டப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி கூறினார்.
மேலும் அவர் பேசுகையில்

10.5% இடஒதுக்கீடு வழக்கில் மூத்த வழக்கறிஞரை வைத்து தமிழக அரசு வாதாடியது. சிறப்பு இடஒதுக்கீடு தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் குறிப்பிட்டார்.

தேர்தல் அறிவிப்புக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டது. இடஒதுக்கீடு ரத்தானதுக்கு, அதிமுகவின் அவசர கதியே காரணம் எனவும் முதல்வர் சாடினார்.இதனால் உள் ஒதுக்கீடு ரத்தானது அதிமுக.வின் அவசர கதியே காரணம். வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு தீவிரமாக வாதாடியது. மூத்த வழக்கறிஞரின் வாதத்தை நீதிமன்றமே பாராட்டியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஆணித்தரமான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியதாவது,

அதிமுகவை பொறுத்தவரை அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். சட்டசபையில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளனர். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில், ஏராளமான வழக்கு தொடரப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. மூத்த வழக்கறிஞர்கள் வாதாடவில்லை. போதிய தகவல்களும் அளிக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியின் போது, ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவையும் ஆட்சி மாறிய பின்னர் முழுமையாக செயல்பட வேண்டும். இந்த ஆணையம் தொடர்ந்து செயல்பட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, மூத்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாடுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடிய அரசு, மதுரை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடாதது ஏன்? தரவுகளை சமர்பிக்காதது ஏன்? இதையெல்லாம் மறைத்துவிட்டு முந்தைய ஆட்சி மீது பழிசுமத்துகின்றனர். இட ஒதுக்கீட்டு வழக்கில் தோல்வியடைய திமுக அரசு தான் காரணம் . இவ்வாறு அவர் கூறினார்.

images 9 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.