china apps - 2026

உங்க தரவுகளுக்கு ஆப்பு வைக்கும் ஆப்ஸ்! உடனே நீக்கவும்..!

சற்றுமுன் அடடே... அப்படியா? தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
china apps - 2026

தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாம் பெரும்பாலும் அனைத்து வேலைகளுக்குமே ஸ்மார்ட்போன்களையே நம்பி உள்ளோம். அந்தவகையில் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூகுள் பிளேஸ்டோர் மட்டுமின்றி தெரியாத தளங்களில் இருந்து அடிக்கடி செயலிகளை பதிவிறக்கம் செய்கிறார்கள்.

அதில் உள்ள செயலிகள் பல தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும் என்பதாலும், ஹேக்கர்கள் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடக்கூடும் என்பதாலும் கூகுள் நிறுவனம் அவ்வப்போது ஆபத்தான செயலிகளை நீக்கி வருகிறது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள 6 மால்வேர் செயலிகள் கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களைத் திருட பயனர்களின் சாதனங்களைப் பாதிக்கும் வகையில் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

anti-virus apps என்ற போலி பெயரில் உள்ள 6 மால்வேர் ஆப்ஸ்களை இப்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

குறைந்தது 15,000 ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மால்வேர் எதிர்ப்பு பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

‘Antivirus, Super Cleaner’; ‘Center Security – Antivirus’ and ‘Powerful Cleaner Antivirus ஆகிய செயலிகள் அடங்கும். பகுப்பாய்வின் போது பாதிக்கப்பட்ட சாதனங்களின் சுமார் 1,000 தனிப்பட்ட ஐபி முகவரிகளை இது அடையாளம் கண்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இத்தாலி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. Antivirus, Super Cleaner’, ‘Center Security Antivirus’,’Powerful Cleaner Antivirus’ ஆகிய போலி வைரஸ் தடுப்பு செயலிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.