தமிழகத்தில் வரும் 16-ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
வரும் 14-ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும் 15-ம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால், 16-ம் தேதியும் (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என பள்ளிகல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். விடுமுறை முடித்து ஏப்.,18 ஆம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வரும் 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.





