குற்றாலம் சிற்றாற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

சற்றுமுன் நெல்லை

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த சுற்றுலா தளமான குற்றாலத்தில் உள்ள பராசக்தி நகரில் அரசு மதுபானக்கடை உள்ளது. அதன் அருகே செல்லும் சிற்றாற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக நேற்று இரவு குற்றாலம் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் இரவு முழுவதும் தேடினர் இருள் சூழ்ந்த பகுதி என்பதால் சடலத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மீண்டும் இன்று காலை சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர் அப்போது ஆற்றில் முட்புதர் நிறைந்த ஒரு பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடைப்பதை கண்டு பிடித்தனர் இந்த நபர் இறந்து சுமார் 10 தினங்களுக்கும் மேல் ஆகி இருகாலம் என தெரிகிறது தலை, கை, கால் சிதைந்து உடல் அழுகிய நிலையில் சடலம் கானப்பட்டது. இதனால் இறந்தவர் யார் என்பது குறித்து அடையாளம் காணமுடியவில்லை. இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து ஆற்றில் வீசி சென்றனரா? என்ற கோணத்தில் குற்றாலம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.