தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 46 ரன்கள் எடுத்து 10 ஆயிரம் என்ற மைல்கல்லை டோனி எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று  நடக்கிறது. தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்கும் ஆர்வத்துடன் இந்திய அணி களம் இறங்க இருக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான டோனி இன்றைய ஆட்டத்தில் 10 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை படைப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

36 வயதான அவர் 316 ஒருநாள் போட்டியில் 271 இன்னிங்சில் விளையாடி 9,954 ரன் எடுத்துள்ளார். சராசரி 51.57 ஆகும். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார். 10 சதமும், 67 அரை சதமும் அடித்துள்ளார். 10 ஆயிரம் ரன்னை எடுக்க டோனிக்கு இன்னும் 46 ரன்னே தேவை. 10 ஆயிரம் ரன்னை எடுக்கும் 4-வது இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் 12-வது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending