lion 2 - 2026

சுற்றி வளைத்த சிங்கக்கூட்டம்.. ஒற்றை ஆளாய் ஒட்டகச்சிவிங்கி..!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
lion 2 - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான சண்டை வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

சிங்கக்கூட்டத்துடன் மோதும் ஒட்டகச்சிவிங்கியின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது
ஒட்டகச்சிவிங்கியின் வலுவான உதையை சிங்கமும் அதன் குட்டிகளும் ஒரு நாளும் மறக்க முடியாது என்று தோன்றும் அளவுக்கு ஒட்டகச்சிவிங்கியின் உதை வேகமாய் இருக்கிறது.

சமூக ஊடகங்களில் வைரலாகும் விலங்குகளின் சண்டை வீடியோவில், சிங்கம் தனது குட்டிகளுடன் ஒட்டகச்சிவிங்கியை எப்படித் தாக்க முயல்கிறது என்பதைக் காணலாம்.

ஆனால் ஒட்டகச்சிவிங்கியின் தைரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றால், சிங்கத்துக்கே அது வியப்பாக இருந்திருக்கும்.

காட்டுக்கே ராஜான்னாலும் எங்கிட்ட வச்சுக்காத என்று சொல்லும் அளவுக்கு சிங்கக்கூட்டத்துக்கு டஃப் ஃபைட் கொடுக்கிறது ஒட்டகச்சிவிங்கி. கலக்கலான உதை வீடியோ இன்ஸ்டாகிராமில் வைல்ட்லைஃப் ஸ்டோரிஸ் என்ற கணக்கில் பதிவேற்ற்ப்பட்டு பலரால் பகிரப்பட்டுள்ளது.

ஒட்டச்சிவிங்கியின் உயரத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல், அதனுடன் ஒப்பிடும்போது குள்ளமாக இருக்கும் சிங்கம், சீறி பாய்ந்து தாக்கினாலும் தனது வலிமையான கால்களை பயன்படுத்தி ஒட்டச்சிவிங்கி உதைக்கிறது.

சிங்கமும் அதன் குட்டிகளும் ஒட்டகச்சிவிங்கியை எப்படி வேட்டையாட முயல்கின்றன என்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது. அதேபோல, பதற்றமே இல்லாமல் ஒட்டகச்சிவிங்கி சமயம் கிடைக்கும் போதெல்லாம் உதைக்கிறது.

ஒட்டகச்சிவிங்கி மீது சிங்கம் தாக்குதல் நடத்துகிறது. வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒட்டகச்சிவிங்கி காட்டில் எப்படி ஒய்யாரமாக நிற்கிறது என்பதை பார்க்கலாம். ஆனால் சிங்கமும் அதன் குட்டிகளும் சுற்றி வளைக்கின்றன.

முதலில் சிங்கத்தின் குட்டிகள் ஒட்டகச்சிவிங்கியின் காலைப் பிடித்து தாக்க முயல்வதால், ஒட்டகச்சிவிங்கி பலமாக உதைக்கிறது. உதை வாங்கிய குட்டி சிங்கங்கள் தூரப் போய் விழுகின்றன.

வீடியோவின் முடிவில், ஒட்டகச்சிவிங்கி அனைத்து சிங்கங்களையும் வலுவாக உதைப்பதைப் பார்க்கலாம். இறுதியில், அனைத்து சிங்கங்களையும் துரத்துவதில் வெற்றி பெறுகிறது ஒட்டகச்சிவிங்கி.

25 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இதுவரை 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது.

வீடியோவிற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன. ஒட்டகச்சிவிங்கியின் துணிச்சலைக் கண்டு கமெண்ட் பாக்ஸில் நெட்டிசன்களும் ரியாக்ஷன்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.