கனேடிய ஸ்காலர்ஷிப்பை வென்ற இந்திய பெண்!

Published:

radha hari - 2026

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய பெண்ணொருவர் மதிப்புமிக்க கனேடிய ஸ்காலர்ஷிப்பை வென்றுள்ளார்.

Oud Methaவில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவியான ராதா ஹரி (17) கனடாவில் உள்ள ஹூரான் பல்கலைக்கழகத்தில் இருந்து 77,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ‌ 58,94,565.60) ஸ்காலர்ஷிப்பாக வென்றுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ராதாவின் தலைமைத்துவம் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் பணியை அங்கீகரிப்பதற்காக இந்த கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.

radha hari 1 - 2026

மேலும் தனது நண்பர்களுடன் சேர்ந்து, கேர்ள் அப் என்ற கிளப் என்ற சங்கத்தை ராதா நிறுவினார். இது மார்பக புற்றுநோய், மனநல பிரச்சினைகள், இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிற பிரச்சனைகள் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்ப்பட்ட சங்கமாகும்.

ராதா கூறுகையில், ஸ்காலர்ஷிப்பை பெறுவதன் மூலம், எனது பெற்றோரின் சுமையை குறைக்க முடியும். மேலும் இது எனது தனிப்பட்ட மற்றும் தொழில் வளர்ச்சிக்கு நிறைய கதவுகளைத் திறந்துள்ளது என கூறியுள்ளார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img