தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில்
மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 9 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்தால் போதும்.பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்கள் காலை 9:45 மணிக்கு தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும்.
காலை 10 மணி முதல் 10:10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர்.
காலை 10:15 முதல் பிற்பகல் 1:15 மணிவரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை தெரிவித்து ள்ளது.
பொதுத்தேர்வின் போது மாணவர்கள் நீலம் அல்லது கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.விடைத்தாளின் எந்தத் தாளையும் கிழிக்கவோ, நீக்கவோ கூடாது.விடைத்தாளில் எந்தவித குறியீடும் இடம்பெறக்கூடாது; விடைத்தாளை
சேதப்படுத்தக்கூடாது.விடைத்தாளில் எந்த பக்கத்திலும் தேர்வு எண், பெயர் போன்றவற்றை எழுதக்கூடாது.
வினா எண் எழுதாத அல்லது தவறான வினா எண் குறிக்கப்பட்ட விடைகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
