794713 - 2026

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு ஷிகெல்லா வைரஸ் தான் காரணம்…

சற்றுமுன்

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு விவகாரம் ஷிகெல்லா வைரஸ் தான் காரணம் என ஆய்வில் இன்று தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள செருவத்தூர் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் இரு நாட்களுக்கு முன் உயிரிழந்தார்

கான்ஹாகட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவநந்தா. இவர் காசர்கோடு மாவட்டம் கரிவலூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று தேவநந்தாவும் அவருடைய பள்ளியில் படிக்கும் 18 பேரும் ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திலேயே ஒன்றின்பின் ஒருவராக மயங்கிவிழ அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உணவு விஷத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தேவநந்தா உயிரிழக்க 17 பேர் உட்பட 31 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஷவர்மா விற்கப்பட்ட கடைக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டது. அதை சமைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு +1 மாணவி உயிரிழந்ததற்கு ஷிகெல்லா பாக்டீரியாதான் காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

794713 - 2026

அசுத்தமான தண்ணீர், உணவில் இந்த பாக்டீரியா பரவும் எனவும் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 3 மாணவிகளுக்கு ஷிகெல்லா பரவியுள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.