IMG 20220505 WA0062 - 2026

கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி கோயிலில் நாளை ஆராட்டு …

சற்றுமுன்

கேரளாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய ஷேத்திரங்களில் ஒன்றான  கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி கோயில் ஆராட்டு விழா மற்றும் யானைகள் அணிவகுத்து செல்லும் ஊர்வலம் நாளை கொட்டாரக்கரையில் நடைபெறுகிறது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய ஷேத்திரங்களில் கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி ஷேத்திரமும் ஒன்றாகும்.
இக்கோவிலில் மூலஸ்தானத்தில் மகாதேவர் பார்வதி மற்றும் மகாகணபதி மூன்று திசைகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

இக்கோவிலில் நாள் முழுவதும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றாலும் ஆவணி சுக்கில பட்ச கணபதிசதுர்த்தி மற்றும் மாத சதுர்த்தி, மாத சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் இக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு உற்சவம் மிகப் பிரபலமானது .இந்த ஆண்டு இக்கோவில் ஆராட்டு உற்சவம் கடந்த மாதம் 26ஆம் தேதி கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் வேத பாராயண முறைப்படி கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது .

தினசரி மகாகணபதி மஹாதேவர் பார்வதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் சுவாமி வீதிஉலா நடைபெற்றது முக்கிய விழாவாக செவ்வாய்க்கிழமை எட்டாம் பூரம் விழா பிரபலமாக கொண்டாடப்பட்டது .இந்த விழாவில் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று இரவு சுவாமி பள்ளிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும்.நாளை காலை கோவில் முன்பு உள்ள திருக்குளத்தில் சுவாமிக்கு ஆராட்டு வைபவம் நடைபெறும் மாலையில் மிகப் பிரம்மாண்டமான கோஷ யாத்திரை நடைபெறும் நெற்றிப்பட்டம் கட்டிய யானைகள் அணிவகுத்து செல்ல கேரளாவின் பாரம்பரிய பஞ்ச வாத்தியங்கள் முழக்கத்துடன் கலை கலாச்சார நிகழ்வுடன் இந்த கோஷ யாத்திரை விமர்சையாக நடைபெறும் இத்துடன் இந்த ஆண்டுக்கான பத்து நாள் திருவிழா நிறைவடையும்.இக் கோயில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் செங்கோட்டை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
IMG 20220505 WA0062 - 2026
IMG 20220505 WA0049 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.