Elan musk - 2026

நான் மர்ம முறையில் இறந்தால்… எலான் மஸ்க் அதிர்ச்சி ட்வீட்!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
Elan musk - 2026

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.எலான் மஸ்க் பரபரப்பு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

இந்த ட்வீட்டை பதிவிடுவதற்கு முன்னர் அவர் ரஷ்ய மொழியில் ட்வீட் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் ‘உக்ரைனின் சர்வாதிகாரி படைகளுக்கு ராணுவ தொலைத்தொடர்பு கருவிகளை எலான் மஸ்க் அளித்து வருகிறார்.

நீங்கள் என்ன தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டாலும் நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி செய்வதால் ரஷ்யப் படைகள் அவருக்கு மிரட்டல் விடுத்திருக்க வேண்டும். அதனால், அவர் இப்படியான ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள் மூலம் அந்நாட்டிற்கு ப்ராட்பேண்ட் சேவையை எலான் மஸ்க் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.