school leave - 2026

கோடை விடுமுறையிலும் கல்வி வகுப்புகள்.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

சற்றுமுன் அடடே... அப்படியா? கல்வி தமிழகம்
school leave - 2026

தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோடை விடுமுறையிலும் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் இளம்பகவத் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், வழக்கமான பாடங்கள் இல்லாமல் விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகள் போன்ற மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் வகுப்புகள் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

வருகின்ற மே 14-ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், இந்த நாட்களில் இல்லம் தேடி கல்வித்திட்ட வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.