குற்றாலத்தில் மெயின் அருவி ஐந்தருவியில் ஜில்ஜில் தண்ணீர் (வீடியோ)..

Published:

கேரளா தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மே 15க்கு பிறகு துவங்கும் என கூறிவந்தநிலையில் பிரசித்தி பெற்ற குற்றாலத்தில் தற்போதே சீசன் எட்டிப்பார்க்க துவங்கி விட்டது.மெயின் அருவி ஐந்தருவியில் தண்ணீர் ஜில்லென கொட்டுகிறது.

குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். வழக்கமாக மே மாதம் இறுதியில் பருவக்காற்று வீசத்தொடங்கும்.

ஆனால் இந்தாண்டு முன்னதாக தென்காசி மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. கடந்த சில நாட்களாக தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், இலஞ்சி, உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

இந்நிலையில் 2 நாட்களாக மலைப்பகுதிகள் மட்டுமின்றி ஊர்ப்பகுதியிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரை அதிகபட்சமாக தென்காசியில் 4.40 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணைப்பகுதியில் 3 மில்லிமீட்டரும் மழை பதிவானது. கேரளாவில் வனப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் குற்றாலத்தில் மெயினருவி ஐந்தருவி உள்ளிட்ட பிரதான அருவிகளில் தணணீர் போதுமான அளவிற்கு கொட்டுகிறது.

தற்போது பல மாவட்டங்களில் கத்திரி வெயில் வாட்டி வருகிறது. ஆனால் தென்காசி மாவட்டத்தில் அதற்கு மாறாக குளுகுளு சீதோஷனநிலை நீடித்து வருகிறது. குற்றால அருவிகளில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.தமிழககேரள சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறி காணப்படுவதால் குற்றாலத்தில் சீசன் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

images 34 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img