
ஒளியின் உயர்வு
செழுமணிக் கொளி அதன் மட்டிலே! அதினுமோ
செய்யகச் சோதம் எனவே
செப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி! அதனினும்
தீபத்தின் ஒளிஅ திகமாம்!
பழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்!
பகல்வர்த்தி அதில்அ திகமாம்! ப
ாரமத் தாப்பின்ஒளி அதில் அதிகமாம்! அதிலுமோ
பனிமதிக் கொளிஅ திகம்ஆம்!
விழைதரு பரிதிக்கும் மனுநீதி மன்னர்க்கும்
வீரவித ரணிக ருக்கும்
மிக்கவொளி திசைதொறும் போய்விளங் கிடும்என்ன
விரகுளோர் உரைசெய் குவார்!
அழல்விழிகொ டெரிசெய்து மதனவேள் தனைவென்ற
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
தீவிழியினாலே காமனை எரித்து வென்ற பெரியோனே!, அருமை தேவனே!, நல்ல
மாணிக்கத்துக்கு அதன் அளவிலேதான் ஒளியுண்டு, அம்மணியைக்
காட்டினும் சிவந்த மின்மினியெனக் கூறப்படும் புழுவுக்கு மிகுதியான ஒளி
உண்டு, அந்த மின்மினியினும்
விளக்கின் ஒளி மிகுதியாகும், விளக்கினும் குற்றமற்ற தீவர்த்தியின் (ஒளி) மிகுதியாகும், அதனினும் பகல்வர்த்தி(யின் ஒளி)
மிகுதியாகும், பகல்வர்த்தியினும்
பெரிய மத்தாப்பின் ஒளி மிகுதியாகும், மத்தாப்பினும் குளிர்ந்த திங்களின் ஒளி மிகுதியாகும், விருப்பம் ஊட்டும்
ஞாயிற்றினுக்கும் செங்கோல் அரசர்க்கும் வீரமுடைய அறிஞருக்கும்,
மிக்கஒளி திசைதொறும் போய்விளங்கிடும் பேரொளி எட்டுத்திக்கினும் சென்று விசும் என்று
அறிவுடையோர் கூறுவர்.
அரசர்க்கும் வீரருக்கும் எட்டுத்திக்கினும் பரிகியென ஒளி பரவும்.