images 2022 05 21T110316.584 - 2026

தருமபுரம் ஆதீன திருமடத்தில் நாளை பட்டினப்பிரவேசம்..

சற்றுமுன்

தருமபுரம் ஆதீன திருமடத்தில் நாளை மே22ல் நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தருமபுரம்ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உள்ள பழமைவாய்ந்த ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில்ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழாமே 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கியநிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.தருமபுரம் ஆதீன குருமுதல்வர் குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று குருஞானசம்பந்தரின் குருவான கயிலை ஞானப்பிரகாசரின் குருபூஜை திருநாள் விழா நடைபெற்று வருகிறது.

இன்று காலை தருமபுரம் ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திரு மடத்தில் இருந்து நாற்காலி (சவாரி) பல்லக்கில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க, தேவாரம் இசைக்க மேல குரு மூர்த்தங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து குருமகாசன்னிதானம் வன துர்க்கை அம்மன் கோவில் மற்றும் நட்சத்திர தென்னை ஆகியவற்றை வழிபாடு செய்தார். பின்னர் நாற்காலி பல்லக்கில் எழுந்தருளி திரு மடத்தை வந்தடைந்தார். பல்லக்கைச் சுமப்பபதற்காக பலரும் போட்டி போட்டுக்கொண்டு முன்வந்தது பார்ப்போரை பரவசப்படுத்தியது

இந்த விழாவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 27 ஆயிரம்மரக்கன்றுகள் நடப்பட்டது
இதைத் தொடர்ந்து, மே 22-ம் தேதி (நாளை) இரவு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும்.

இதில், பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சில அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்வதாக கூறியுள்ளனர் என தருமபுரம் ஆதீனகர்த்தர் செய்தியாளர்களிடம்
தெரிவித்துள்ளார்.

images 2022 05 21T110316.584 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.