கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க மேலும் 4 மருத்துவர்கள் வருகை

Published:

02 July27 Karuna nidhi - 2026உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க மேலும் 4 மருத்துவர்கள் காவிரி மருத்துவமனையில் இருந்து வருகை புரிந்துள்ளனர்.

தி.மு.க. தலைவா் கருணாநிதி உடல் நலிவுற்று இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு அதிகாலை வரையில் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
தி.மு.க. தலைவா் கருணாநிதிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வயது முதிா்வு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்தவாறு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் காவேரி மருத்துவமனை தரப்பில் நேற்று மாலை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், கருணாநிதிக்கு வயது முதிா்வு காரணமாக சிறுநீரக குழாயில் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு சிறிது காய்ச்சல் உள்ளது. அவரை 24 மணி நேரமும் மருத்துவா், செவிலியா் குழு தீவிரமாக கவனித்து வருகிறது. தற்போது வீட்டிலேயே அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு யாரும் நேரில் வந்து பாா்க்க வேண்டாம்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

இதனையடுத்து,தமிழக துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தற்போது கருணாநிதியின் வீட்டிற்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்தாா். துணைமுதல்வருடன் மூத்த அமைச்சா்களான ஜெயக்குமாா், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோா் உடன் வந்தனர்.

Related articles

Recent articles

spot_img