அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் அழைப்பின்பேரில் திருநாவுக்கரசர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புதுடெல்லி சென்றனர். ராகுல்காந்தியை திருநாவுக்கரசர் மீண்டும் சந்தித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினார். இதற்கிடையே நடிகை குஷ்புவும் ராகுல்காந்தியை தனியாக சந்தித்து பேசியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தியிருப்பதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கட்சி தலைமை தொடங்கி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari