பளுத்தூக்கும் பாட்டி.. பார்த்து வியந்த நெட்டிசன்ஸ்!

patti - 2026

சோசியல் மீடியா வயதானவர்களின் திறமைகளையும் வெளிக் கொண்டு வரச்செய்யும், ஆச்சர்யத்தில் வாய் பிளக்க வைக்கும் வீடியோக்களின் களஞ்சியமாக உள்ளது.

எதையாவது சாதிக்க முடியும் என செய்து காட்ட நினைக்கும் முதியவர்களின் வீடியோக்களுக்கு எப்போதுமே சோசியல் மீடியாவில் தனி மரியாதை உண்டு.

அந்த வகையில் தற்போது மூதாட்டி ஒருவர் டெட்லிஃப்ட் எனப்படும் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு வயதான மூதாட்டி தனது பேரனை வெறுப்பேற்றுவதற்காக அவர் வைத்திருந்த வெயிட் லிஃப்ட் கருவியை அசால்ட்டாக தலைக்கு மேல் தூக்கி கெத்து காட்டினால் எப்படியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் ‘பஞ்சாபிஇண்டஸ்ட்ரி_‘ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சுடிதார் அணிந்திருக்கும் முதாட்டி ஒருவர் 20 கிலோவுக்கு மேல் எடையுள்ள வெயிட்டை ஈஸியாக இரண்டு கைகளாலும் தலைக்கு மேல் தூக்கும் காட்சியும், அதனைப் பார்த்து அசத்துப்போன இளைஞர் ஒருவர் அவரிடம் இருந்து டெட்லிஃப்ட்டை வாங்கிக்கொண்டு, அனுப்பும் நகைச்சுவை நிகழ்வும் இடம் பெற்றுள்ளது.

80 வயதான தனது பாட்டி டெட்லிஃப்ட் செய்யும் காட்சியை பேரன் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை நன்றாக உற்றுநோக்கினால் மூதாட்டி எவ்வித சிரமும் இன்றி அவ்வளவு எடையுள்ள உடற்பயிற்சி கருவியை தலைக்கு மேல் தூக்கி, அதனை சில நிமிடங்கள் வரை வைத்திருப்பதையும், அந்த அதிர்ச்சியில் இருந்து விலகாத பேரன் அவருக்கு எடையை கீழே இறக்கி வைக்க உதவுவதையும் பார்க்கலாம்.

80 வயதிலும் தளராத தையரித்துடன் மூதாட்டி செய்த காரியம் சோசியல் மீடியாவில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இந்த வீடியோவை காணும் பலரும், ‘நிஜமாகவே அவர் தூக்குவது வெயிட்டா?’, ‘எப்படி அவரால் இதனை இவ்வளவு சுலபமாக செய்ய முடிகிறது?’ என அதிர்ச்சியும், ஆச்சர்யமும் கலந்த பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த வீடியோவை இதுவரை 9,100க்கும் அதிகமானோர் கண்டு ரசித்ததோடு, ஏராளமானோர் ஷேர் செய்தும் வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories