RN Ravi - 2026

மொழிகள் பல பேசினாலும் அகண்ட பாரதம் என்பதே குறிக்கோள்-திருவாரூரில் ஆளுநர்..

சற்றுமுன்

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் மொழிகள் பல பேசினாலும் அகண்ட பாரதம் என்பதே குறிக்கோளாக உள்ளது என்றார்.

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கைத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் புதிய கல்விக் கொள்கையின் அவசியம், முக்கியத்துவம் குறித்தும் விளக்கிப் பேசியபின், இந்தியாவில் பல மொழிகள் பேசினாலும் அகண்ட பாரதம் என்பதே குறிக்கோளாக உள்ளது என்றார். முன்னதாக, ஆளுநருக்கு மேள தாளம், பொய்க் கால் குதிரை ஆட்டம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

கருத்தரங்கில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர் ஏ.பி.தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கையில் உள்ள சாதக மற்றும் பாதகமான அம்சங்களை கலந்தாலோசனை செய்து, சாதகமான அம்சங்களை எடுத்துக்கொள்வதற்காகவே 2 நாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இதில், நாட்டில் உள்ள 38 மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், என்ஐடி மற்றும் ஐஐடி இயக்குநா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனர்.மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கவேண்டும் என்பதே கருத்தரங்கின் நோக்கமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RN Ravi - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.